தமிழகத்தில் மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல் காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் கிலோ 1800 ரூபாய் வரை விற்கப்பட்ட வஞ்சிரம் இன்று 1100 ரூபாய் வரை விற்பனையாகிறது. சங்கரா 350 ரூபாய், நெத்திலி 250 ரூபாய், நண்டு 350 ரூபாய், சிறிய ரக வஞ்சிரம் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து வகை மீன்களின் விலையும் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.