மைக்ரோசாஃப்ட்-ன் விண்டோஸ் சாப்ட்வேரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக பயனர்களுக்கு சேவை வழங்குவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டுவருவதாக SpiceJet மற்றும் Indigo நிறுவனங்கள் தங்களது அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறது. புதிய Crowdstrike அப்டேட் காரணமாக உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகள் தற்போது பாதிப்படைந்துள்ளன.