தமிழக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது தள பக்கத்தில், தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்! என தெரிவித்துள்ளார். மேலும் தந்தை கருணாநிதி உடனான தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.