கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.