உத்திரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் புத்வா வனப்பகுதியில் கந்தக் கால்வாயின் கரையில் 60 வயது முதியவர் ஒருவர் அமர்ந்துள்ளார். அப்போது கால்வாயில் இருந்து திடீரென வெளியே வந்த முதலை அவரின் அந்தரங்க உறுப்பை கடித்துவிட்டுச் சென்றது. அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.