திமுக முன்னாள் எம்.பி. வி.பி.சண்முகசுந்தரம் (75) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. 1996இல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று அவர் நாடாளுமன்றம் சென்றார். அவரது மறைவு செய்தியறிந்து திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.