யூரோ கால்பந்து போட்டியில் ஆஷ்ட்ரியா – பிரான்ஸ் இடையேயான நேற்றைய ஆட்டத்தில், பிரான்ஸ் அணி கேப்டன் எம்பாப்பேவுக்கு மூக்கில் பலத்த காயம். அவர் மூக்கின் தண்டு உடைந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கோல் அடிக்க முயன்றபோது, ஆஷ்ட்ரியா டிஃபெண்டர் கெவின் டான்சோவுடன் மோதியதில் காயம் ஏற்பட்டது.
மருத்துவ முதலுதவிப் பெற்றுக்கொண்டு, ஜெர்சியில் ரத்தக் கரையுடன் மீண்டும் விளையாடத் தொடங்கிய எம்பாப்வே, சிறிது நேரத்திலேயே வலியால் சுருண்டு விழ, அவர் வேண்டுமென்றே ஆட்ட நேரத்தை வீணடிப்பதாக ஆஷ்ட்ரியா ரசிகர்கள் மைதானத்தில் கூச்சல் எழுப்பினர்.