நடிகர் சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், இன்று பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. நெருங்கிய சினிமா நண்பர்கள், உறவினர்கள் மட்டும் கலந்துக்கொண்ட இவ்விழாவில், மூத்த மகள் ஆராதனா மற்றும் 2ஆவது மகன் குகன் ஆகியோர் ஆசையாக தேர்வு செய்த “பவன்” என்ற பெயரை, தனது 3ஆவது குழந்தைக்கு சூட்டி எஸ்.கே. மகிழ்ச்சியடைந்தார். இதுதொடர்பான அழகான வீடியோ வெளியாகியுள்ளது.