நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய, மம்தா பானர்ஜி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழகம், கர்நாடகாவில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது