ரேஷன் கடைகளில் தங்கு தடை இன்றி பாமாயில், துவரம் பருப்பு விநியோகம் செய்ய தமிழக அரசின் நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களை ஜூன் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் பாமாயில், பருப்பு பெறாதவர்கள் ஜூன் முதல் வாரத்தில் பெறலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மக்களவைத் தேர்தலை ஒட்டி டெண்டர் கோருவதில் ஏற்பட்ட தாமதத்தால் விநியோகம் தாமதமாகியுள்ளது. ரேஷனில் மே மற்றும் ஜூன் மாதத்தில் பருப்பு பாமாயில் விநியோகிக்கவில்லை என்ற புகாரை அடுத்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.