தமிழகத்தில் மே மாதத்திற்கான ரேஷன் பொருள்களை ஜூன் மாதம் இறுதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கு தடையின்றி வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி தவிர்த்து இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.