சென்னையில் மொபைல் செயலி மூலமாக தெருநாய்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் தெரு நாய்களை கணக்கெடுத்து, கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக தெருநாய் கடித்து பலர் காயமடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மாற்று நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.