TANGEDCO இன் மொபைல் செயலி மூலமாக மின் கட்டணம் செலுத்துதல், மின் கட்டணம் அறிதல் உள்ளிட்ட பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் TANGEDCO மொபைல் செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு மொபைல் எண் கொடுத்து OTP மூலமாக Log in செய்ய வேண்டும். பிறகு உங்கள் Consumer No கொடுத்து ஆன்லைன் பேங்கிங் மூலம் எளிதாக மின் கட்டணம் செலுத்தலாம். கட்டண விவரங்களை எளிதில் அறிய முடியும்.