மோடிக்கு பயந்து பாஜகவினர் தனக்கு வணக்கம் கூட சொல்வதில்லை என மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வணக்கம் கூறினால், மோடி நடவடிக்கை எடுப்பாரோ என பாஜக தலைவர்கள் அஞ்சி நடுங்குவதாக தெரிவித்த அவர், அந்த அளவுக்கு மோடியால் பாஜக தலைவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பேசிய மோடி, எதிர்க்கட்சி தலைவரான ராகுலை தான் பெரிதும் மதிப்பதாக கூறியுள்ளார்.