சபாநாயகர் தன்னுடன் கை குலுக்கும் போது விரைப்பாகவும், பிரதமருடன் கை கொடுக்கும்போது குனிந்து தலைவணங்கியும் நின்றதாக ராகுல்காந்தி மக்களவையில் குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் இதற்கு விளக்கமளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, “வயதில் மூத்தோரிடம் தலை வணங்குவது நமது கலாசார மரபு. அதனைதான் பின்பற்றினேன். ஒத்த வயதுடைய உங்களிடம் சரி சமமாக பேசினேன்” என்று கூறினார்.