மோடியின் பலவீனமான கூட்டணி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், மோடியின் முகாம் அதிருப்தி நிறைந்த முகாமாக காட்சியளிக்கின்றது. அங்கிருக்கும் பலர் எங்களோடு தொடர்பில் உள்ளனர். மோடி தலைமையில் அமைந்திருப்பது பலவீனமான கூட்டணி அரசு, இது ஒவ்வொரு நாளும் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே போராடும் என்று கூறியுள்ளார்.