மக்களவையில் நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி, பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், அவையில் ராகுல் காந்தியைப் போல நடந்துகொள்ள கூடாது என NDA எம்பிக்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நேருவுக்கு பிறகு 3ஆவது முறையாக டீ விற்றவர் பிரதமராகியுள்ளது சிலரை அமைதியிழக்கச் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.