பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராமதாஸின் 86ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இருவரும் சில நிமிடங்கள் அரசியல் கடந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது