2024 டி20 உலக கோப்பை லீக் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நியூயார்க்கில் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவரில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் 31 பந்துகளில் 42 ரன்களும், அக்சர் படேல் 20 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணியில் நசீம்சா மற்றும் ஹாரிஸ் ரவூப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் சாலை விபத்தில் காயமடைந்ததை அறிந்து கண்கலங்கிதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடனான நேற்றைய போட்டிக்கு பின் ரிஷப் பண்டுக்கு சிறந்த பீல்டருக்கான விருதை வழங்கிய பின் பேசிய அவர் டி20 உலக கோப்பையில் ரிஷப் பண்டை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனவும் பண்ட் விபத்திலிருந்து மனவலிமையுடன் மீண்டு வந்து கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறார் என்றார்.