மக்களவை தேர்தலுக்கு முன் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஜரான எஸ்.ஆர்.சேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கோவையில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.