பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. ரூபாய் 7.89 கோடி மதிப்பிலான மேம்பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்ராநதியில் பத்ரியா காட் பகுதியில் ரூபாய் 7.89 கோடியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன் சரிந்துள்ளது. தரமற்ற கட்டுமானத்தால் புதிய பாலம் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.