கொள்ளிடம் ஆற்றில் திமுக ஆட்சியில் 6.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையை காணவில்லை எனக்கூறி, வடிவேல் படத்தை பதிவிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார். திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பைத் தடுக்க, சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம், தற்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனை விமர்சித்து அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.