ரெய்னா, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் மீது புகார் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங் மற்றும் குர்கீரத் மான் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. லெஜெண்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து, அவர்கள் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCPEDP) செயல் இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார்.