வங்கதேசத்தில் அரசு பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. நேற்று மட்டும் 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 105ஆக உயர்ந்துள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு வங்கதேச அரசால் துண்டிக்கப்பட்டுள்ளது.