பிரபாஸ், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898AD’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படம் வெளியான 3 நாள்களில் உலகளவில் ரூ.415 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தொடர்ந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக வசூலை குவிக்க வாய்ப்பு உள்ளது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ரூ.191.5 கோடி வசூலித்தது.