தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்து ஐந்து நாட்களுக்கு வடமாநிலங்களில் கன மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலம், ஹரியானா, மணிப்பூர் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென் மாநிலங்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.