வயநாடு நிலச்சரிவு எதிரொளியாக நீலகிரி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 8 மழை மாவட்டங்களை கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் மழைக்காலங்களில் கண்காணிப்பை தீவிர படுத்தவும் அவசர தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் மழை நேரத்தில் வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை துறை இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.