கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்களில் தோண்ட தோண்ட சடலங்கள் வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றுஅதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து பேரிடர் மீட்புப் படை குழுக்களும், முப்படைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.