தமிழ்நாட்டை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு அளப்பரியது.
பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டு மக்களுடைய தேவைகளையெல்லாம் மத்திய அரசு புறக்கணித்திருக்கிறது. இது போன்ற புறக்கணிப்புகள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி தத்துவத்தின் ஆன்மாவையும் குலைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.