நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.பி. தயாநிதி மாறன், “தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைத்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி, தனக்கு வாக்களித்தவர்களைப் பற்றி கூட சிந்திக்காமல், கூட்டணி கட்சிகளுக்காக மட்டுமே உழைக்கிறார். சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத்திற்காக மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை.” என்று சாடினார்.