விக்கிரவாண்டியில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இடைத்தேர்தல் வெற்றிக்காக விக்கிரவாண்டியில் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர் வெற்றி பெறுவதற்காக திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்றார் முன்னதாக இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக் கூறிய அதிமுக தேர்தலை புறக்கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.