விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். மேலும் அவர், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் ம.ஜ.க மாநிலச் செயலாளர் ஷஃபி தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.