ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாக சென்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் மனு தாக்கல் செய்தார். கடந்த 14ஆம் தேதி முதல் தற்போது வரை 7 பேர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பாமக வேட்பாளர் சி அன்புமணியும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதிமுக, தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.