நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து தயாரான இப்படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம், நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது. அதேபோல் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஹிட் லிஸ்ட்’ மற்றும் 8 தோட்டாக்கள் மூலம் கவனம் ஈர்த்த வெற்றி நடித்த ‘பகலறியான்’ திரைப்படமும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானது.