வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை-2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாள்களில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை 2ஆம் பாகத்தின் மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் தொடர்பான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், சிறப்பு தோற்றத்தில் எஸ்.ஜே சூர்யா நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.