விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1,000 கோடி மூலதன நிதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதியானது சர்வதேச விண்வெளி துறையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தும் என்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் தனியார் துறை பங்கேற்பை ஊக்குவிப்பதோடு, விண்வெளிப் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்