மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானப் பொறியியல் நிலையத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 39 பேர் நோய்வாய்ப்பட்டனர். இருந்தாலும் பயணிகள் யாரும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றும், விமான சேவையில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. எரிவாயு கசிவு சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.