தேர்வு முறைகேடு விவகாரங்களில் மாணவர்களின் பிரச்னைக்கு தீர்வு காண காங்., கட்சி விரும்பவில்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார். என்டிஏ கூட்டணி அரசு மீது முறைகேடு தொடர்பான பழிகளை சுமத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது எனக் கூறிய அவர், ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.