டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஓராண்டாக தண்ணீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருதியதாக கூறிய அவர், திமுக அரசு காப்பீட்டு திட்டம் அறிவிக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக காலத்தில் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியதாகவும் கூறியுள்ளார்.