கள்ளக்குறிச்சி கருணாகுளம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க கள்ளக்குறிச்சி செல்கிறார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். அவர் ஏற்கனவே சென்னையில் இருந்து புறப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவிக்க உள்ளார். இந்த மரணங்களுக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என்று இன்று காலை விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.