வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் வெற்றிக்கு பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்கப் போகிறோம் என்பதை முன்பே உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது அதிமுக. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக. தங்களது 100% தோல்வியை மறைக்க கீழ்த்தரமான பரப்புரையை செய்தது. பொய் வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை என விமர்சித்துள்ளார்.