சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், 12 மணியளவில் அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலின், வாயிலில் இறங்கி தொண்டர்களுடன் இனிப்புகளை பகிர்ந்து கொண்டார்.