கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 11 பேரிடம் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனாலை பன்சிலால் மற்றும் கௌதம் ஆகிய இருவரும் வெளிமாநிலத்தில் இருந்து வாங்கியதும் அதில் நீரை கலந்து விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. வழக்கு விசாரணைக்காக இதுவரை யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.