மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அஞ்சனேரி அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 200க்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர். சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வழிநடத்த, மனிதச்சங்கிலி அமைத்து சுமார் 6 மணி நேரம் போராடி மீட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.