திருப்பூர் அமராவதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணை 90 அடியை எட்டியுள்ளதால், விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, காவிரி ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், தருமபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.