புனித ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில் நடப்பு ஆண்டு புனித ஹஜ் பயணத்தில் 68 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹஜ் பயணத்தின் போது கடும் வெயிலால் பல நாடுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் வயதானவர்கள். அவர்களில் 323 பேர் எகிப்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டில் மொத்தம் 645 பேர் இறந்துள்ளனர்.