உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் போலோ பாபா சாமியாரின் சொற்பொழிவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், இந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்றும், ஆனால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக இழப்பீடு வழங்கவும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.