உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்தப்படும். நீதி விசாரணைக் குழுவில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். இந்த சோகத்திற்கு யார் காரணம் என்பதை கண்டறிவது மட்டுமின்றி, சதி ஏதும் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.