“ஹர்திக் மிகவும் முக்கியமான வீரர். அவரின் திறமை தனித்துவமானதாக இருந்தாலும் அவரின் உடல்நிலை ஒரு சவாலாகதான் எங்களுக்கு இருக்கிறது. மேலும் எல்லா நேரத்திலும் விளையாட தகுந்த கேப்டன் இந்திய அணிக்கு வேண்டும்.” டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா நன்றாக விளையாடிய போதிலும், இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக நியமிக்காதது குறித்து பிசிசிஐயின் தலைமை தேர்வுக்குழு அதிகாரி அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.