உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலை நிறுத்த இரண்டு நிபந்தனைகளை புதின் விதித்துள்ளார். அதில், அவர் 2022ல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நான்கு மாகாண பகுதிகளுக்குள் நுழைந்த உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும். நேட்டோவில் சேரும் முயற்சியை உக்ரைன் கைவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் இது ஹிட்லரின் கெடு போல இருப்பதால் நிபந்தனைகளை ஏற்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார்.